ஐந்தாம் ஆண்டு அனைத்து உறுப்பினர்கள் கூட்டம்
RTP தமிழ் கத்தோலிக்கச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு அனைத்து உறுப்பினர்களின் கூட்டம் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மாணிக்கு நிறைவுப் பெற்றது. COVID சூழ்நிலைக் காரணமாக நிகழ்ச்சி virtual-ஆக நடைப் பெற்றது.
நிகழ்ச்சியை திருமதி. ராஜி அவர்கள் செபத்துடன் தொடங்கி வைத்தார். திரு. பிரான்சிஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திருமதி. சுஜா அவர்கள் 2020-ல் நடந்த நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். திரு. ஜோசப் அவர்கள் நிதி அறிக்கையை வெளியிட்டுப் பேசினார். திரு. லாசர் அவர்கள் 2021-ல் நடக்கப் போகும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். அதற்க்கு அடுத்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் பட்டது. பிறகு திரு. சவேரியார் அவர்கள், 2021- செயற்குழுவில் ல் பணியாற்றிய திருமதி. ராஜி, திருமதி. சுஜா, திருமதி. அனித்தா அவர்களை பாராட்டி, அவர்களுக்கு பாராட்டு பத்திரத்தை அளித்தார். அடுத்த நிகழ்வாக, திரு. அந்தோணி அவர்கள் 2021 செயற்குழு உறுப்பினர்களை அறிமுகப் படுத்தினார்.
2021 செயற்குழு உறுப்பினர்கள்
திரு. ஜெயராஜ் அந்தோணி – தலைவர்
திரு. ஜோசப் பிரேம் ஆனந்த் – உபத் தலைவர்
திரு. விஜய் லாரன்ஸ் – செயலர்
திரு. பிரான்சிஸ் ஆல்பர்ட் – பொருளாளர்
திரு. பவுல் சவரியப்பன் – இயக்குனர்
திரு. சூசை சவரிமுத்து – இயக்குனர்
திரு. சவேரியார் இன்னாசிமுத்து – இயக்குனர்
நிதி கையாளும் குழு
திரு. பிரான்சிஸ் ஆல்பர்ட்(குழுத் தலைவர் )
திரு. பவுல் சவரியப்பன் ( உறுப்பினர்),
திரு. லாசர் அருள்நாயகம் ( உறுப்பினர்)
புதிய தலைவர் திரு. அந்தோணி தலைவர் உரை நிகழ்த்தினார். இறுதியாக திரு. சவேரியார் அவர்கள் நன்றிக் கூற, நிகழ்ச்சி இனிதே முடிந்தது.