Annai Velankanni Pilgrimage – 2019

 ஆக்கம் : ராஜி ஆதர்ஷ்

RTP தமிழ் கத்தோலிக்க  குடும்பத்தின்  வருடாந்திர திருயாத்திரை இந்த வருடமும் (2019) செப்டம்பர்  மாதம் 7ஆம் தேதி சிறப்பாக நடந்தது.  பாடகர் குழுவினர், Basilica of the National Shrine of the Immaculate Conception, Washington, D.C. ஆலயத்தில் காணிக்கை பாடலை அற்புதமாக மனமகிழ்ந்து பாடி இறைவனுக்கு அர்பணித்தனர். அனைத்து  குடும்பங்களும் செப்டம்பர் 6-ஆம் தேதி அவரவர் இல்லத்தில் இருந்து தமது பயணங்களை தொடங்கி அவரவர் தங்கும் இடத்திற்கு , இறைவனின் ஆசியால் பத்திரமாக வந்து சேர்ந்தனர். செப்டம்பர் 7-ஆம் தேதி காலை 11:30 மணியிலிருந்து அனைத்து குடும்பங்களும் ஆலயத்தில் ஒன்று குழுமினர். 12:30 மணியளவில் பாடகர் குழுவினர் பெரிய ஆலயத்தில் இசை கருவிகளோடு பாடல்களை (என்னை உம்மக்களித்தேன் மற்றும் இனிய உன் நாமம்) பாடி ஒத்திகை பார்த்துக்கொண்டனர்.  இனிமையாக ஓத்திகை பார்க்கப்பட்ட மன திருப்தியுடன் மதிய உணவு அருந்த சென்றோம்.

வாகனம் நிறுத்தும் இடத்தில் RTPTCA குடும்பங்கள்அவரவர் இல்லத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவு வகைகள் பரிமாறுவதற்காக வைக்கப்பட்டன. இந்தியாவில், அலுவலக காலங்களில் கையேந்தி பவனில் உண்ட சிந்தனை வந்து செல்ல, பசிக்கு அறுசுவை உணவை ரசித்து உண்டோம். பின் விரைவாய் ஆலயத்திற்க்கு (Lower Church) சென்று, ஜெபமாலை நடைபெற, அதில் பங்கேற்று ஜெபித்துவிட்டு பின் Upper Church ஐ சென்றடைந்தோம்.

வெவ்வேறு மொழி கத்தோலிக்க குடும்பங்கள் இன, மொழி, கலாச்சார வேறுபாடுகள் இருபினும் ஒரே உணர்வோடு அன்னையின் அருளாசி பெறுவதற்கு திரண்டு நின்றனர். திருப்பலி இனிதே துவங்கியது. ஆயர் மற்றும் குருக்கள், வண்ண தோரனை வரிசையுடன் நடந்து வர, மக்கள் எழுந்து நின்று பவனி உலாவை உள்ளார்ந்து கவனிக்க, பாடகர் குழு வருகை பாடலை பாடினர். ஒவ்வொரு மொழி பாடகர் குழுவும் இறைவனுக்கு தங்களின் பாடல்கள் வாயிலாக தமது இறையன்பை அழகாக வெளிப்படுத்தினர். திருப்பலி சிறப்பாக நடைபெற, காணிக்கை பாடல் பாடும் தருணம் வந்தது.  நம் RTPTCA பாடகர் குழு ”என்னை உம்மக்களித்தேன்” என்ற பாடலை சிறப்பாக, இறை உணர்வுடன், இனிதாய், ஒரே குரலாய் பாடினர். இனிதே திருப்பலி முடிவுபெற்றது.

பின் கீழ் தளத்தில் உள்ள Crypt Church-க்கு அனைவரும் சென்றோம். அங்கே சிறுவர்களுக்கு ஆசீர்வாத ஜெபம் நடைபெற்று, ஒவ்வொரு குழந்தைக்கும் ஜெபமாலை பரிசாய் வழங்க பட்டது. திருப்பலியில் பங்கேற்ற D.C ஆலய  தமிழ்பாடகர் குழு நம் குழுவுடன் இனைந்து மாதா பாடல்களான “அமலோற் பவியே மற்றும் இனிய உன் நாமம்”பாட, கேட்போர் செவிக்கு விருந்தாய் அமைந்தது . அங்கே வந்திருந்த அனைத்து RTP குடும்பங்களும் ஒன்றிணைய, அனைவரும் சேர்ந்து ஒரு நினைவு புகைப்படம் எடுத்தோம். அனைவரும் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்து அன்பை வெளிக்காட்டி விடை பெற தொடங்கினோம். இந்த இனிய நாள், ஒரு அருமையான தினம், இறைவன் அளித்த ஆசிர்வாதம், அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. இந்த நிகழ்வுகள் இறைவனால் கொடுக்கப்பட்ட பரிசு, இதே ஆனந்த உணர்வோடு எல்லா நிகழ்வுகளிலும் பங்கு கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

Christmas Carols 2017

During Christmas season, every year, the RTP Tamil Catholic Choir brings the Christmas cheer to every member’s house. In 2017, they visited the houses of around 15 members in Cary, Apex, Morrisville, Raleigh, Clayton, Durham, Chapel Hill and Martinsville in Virginia.

The choir also brought cheer to the parishioners of St. Joseph’s Church in Eden. The following is a video recording of some of the songs they sang. Enjoy!