Christmas Celebration 2017

Christmas Celebration 2017

Text by Savariar. Photos by Joseph.

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்கத்தின் சார்பாக, 2017 கிறிஸ்து பிறப்பு நாள் மிக விமரிசையாக கொண்டாடப்  பட்டது. இந்த வருடம் கிறிஸ்து பிறப்பு  விழாவை  வழக்கம் போல, கிறிஸ்துமஸ் carol-யுடன்  ஆரம்பித்தோம். carol-க்கு எத்தனை  குடும்பங்கள் விருப்பமாக உள்ளனர் என்று அறிய, google-form  மூலமாக கணக்கெடுத்தோம். திரு. ஜோசப் அவர்கள் google form-ஐ வடிவமைத்துக்  கொடுத்தார்கள். இந்த முறை 24 குடும்பங்கள் carol team-ஐ  தங்கள் வீடுகளுக்கு வர விருப்பம் தெரிவித்திருந்தனர். அதனால் நான்கு நாள்கள் carol செய்வதாக முடிவெடுத்தோம். இந்த வருடம் திருவருகைக் காலம் டிசம்பர் 3-ம் தேதி தொடங்கியது, எனவே carol-ஐ  டிசம்பர் 7,2017 வியாழன் தொடங்கி  டிசம்பர் 10,2017 ஞாயிறு வரை செய்ய முடிவெடுத்தோம். திருமதி. Golda அவர்களும், திரு. குமார் அவர்களும் carol பாடல்களை தேர்ந்தெடுத்தார்கள், பல்வேறு வேலைகளுக்கிடையிலும் carol பயிற்சி எடுத்தோம். எல்லா வீடுகளிலும் எங்களை சிறப்பாக வரவேற்றார்கள். இந்த வருட carol உறுப்பினர்கள் திரு.சவேரியார், திரு.அந்தோணி, திரு.வின்சென்ட் குமார், திருமதி. கோல்டா மெர்லின், திருமதி. தீபா, திருமதி. லூர்து ஜெயராணி.

 

டிசம்பர் 17,2017 ஞாயிறுக் கிழமை கிறிஸ்து பிறப்பு திருவிழா . இந்த வருட நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பு திரு.அந்தோணி அவர்களிடம் கொடுக்கப்பட்டது.  காலை 9 மணிக்கு Cary -யில் உள்ள Twin Lake Clubhouseஅலங்கரிக்க தொடங்கினோம். திரு.சவேரியார், திரு.லாசர், திரு.அந்தோணி, திரு.ஜோசப், திரு.அஜி, திரு.ஆதர்ஷ், திரு. குமார், திரு.விவேக் குடும்பத்தினர் வந்து அலங்கரித்தனர். லாசர்-தீபா குடும்பத்தினர் அலங்கார குழுவிற்கு தேநீரும், சிற்றுண்டியும் தந்து தெம்பூட்டினர். மாலை 3:30 மணிக்கு செபமாலையுடன் திருவிழா ஆரம்பித்தது. இந்த வருட திருப்பலியை அருள்திரு. ஞானபிரகாசம் அடிகளாரும், அருள்திரு. லூர்துராஜ் அடிகளாரும் இனைந்து நிறைவேற்றினார்கள். டேவிட், கிறிஸ், ரானன் பூசை உதவி புரிந்தனர். அருள்திரு லூர்துராஜ் அடிகளார்  ஆங்கிலத்திலும், அருள்திரு. ஞானபிரகாசம் அடிகளார்  தமிழிலும் மறையுரை ஆற்றினார்கள். மக்கள் அனைவரும் திருப்பலியில் நன்கு பங்கேற்றார்கள். பாடல் குழுவினர் பாடல்களை சிறப்பாக பாடினார்கள். திருப்பலி சுமார் 5:00 மணிக்கு முடிந்தது.  திருப்பலி முடிந்தவுடன் 5:00 மணிக்கு தேநீர்  வழங்கப்பட்டது.

 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இந்த வருட நிகழ்ச்சி நிரலை திருமதி.வித்யா அவர்கள் சிறப்பாக வடிவமைத்து கொடுத்தார்கள். எல்லா நிகழ்ச்சிகளும் கூட்டு முயற்சியாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம். இதனால் நிறைய பேர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிந்தது. கலை நிகச்சிகளை திருமதி. வித்யாவும், திருமதி. கோல்டாவும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். Logo போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும், பங்குபெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பெற்றன. முதல் இடத்தை Chris Rozario பெற்றார்.  திரு. ஜோசப் அவர்கள் சிறப்பாக ஒலி-ஒளி அமைத்துக் கொடுத்தார். நிகழ்ச்சி நிரல்களும் அதில் பங்கேற்றவர்களின் விவரங்களும் தனி கோப்பில் கொடுக்கப் பட்டுள்ளது.  

 

திரு. பிரான்சிஸ் அவர்கள் நன்றி கூறியவுடன் உணவு பரிமாறப் பட்டது. இந்த வருடம் திருமதி. ஜூலியட் அவர்களும், திரு. வினோத் ராஜ் அவர்களும் உணவு menu-ஐ சிறப்பாக வடிவமைத்து, உணவகங்களிலிருந்து சரியான நேரத்தில் வரவழைத்து, பரிமாறினார்கள். சுமார் இரவு 10:00 மணிக்கு Clubhouse-ஐ சுத்தம் செய்து முடித்தோம். இது ஒரு மறக்கமுடியாத விழாவாக இனிதே முடிந்தது .

 

Event Agenda – 2017 Christmas Celebration

Share your thoughts