புனித தேவசகாயம் பிள்ளை

புனித தேவசகாயம் பிள்ளை

தமிழகத்தின் முதல் புனிதரான தேவசகாயம் பிள்ளை அவர்கள் சனவரி  மாதம் 14-ம் தேதி,1752-ம் ஆண்டு  பிறந்தார்.  அவரின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அவரின் வாழ்க்கை வரலாறையும், செபத்தையும் சனவரி 21, 2024 தமிழ் திருப்பலியில் படித்து ஒப்புக் கொடுத்தோம்.   அவரின் வாழ்க்கை வரலாறும் செபமும் கீழேக்  கொடுக்கப் பட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு

லாசரஸ் பிள்ளை அல்லது தேவசகாயம் பிள்ளை என்றும் அழைக்கப்படும் புனித தேவசகாயம் பிள்ளை, ஏப்ரல் 23, 1712 இல், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். அவர் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார், பின்னர் Netherland மிஷனரி  ஒருவரின் வழிகாட்டுதலில்  கிறிஸ்துவால் அழைக்கப்பட்டு  கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.

தேவசகாயம் பிள்ளை திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவின் படையில் வீரராகப் பணியாற்றியவர். அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியது மற்றும் இந்து சடங்குகளில் பங்கேற்க மறுத்ததால், அரசாங்கத்தாலும்,  தன் சொந்த குடும்பத்தினராலும் வெறுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டாலும் அவர் தனது கிறிஸ்துவ நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.

ஜனவரி 14, 1752 அன்று, புனித தேவசகாயம் பிள்ளை தேசத்துரோகி  என்று பொய் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். சிறைவாசம் முழுவதும், அவர் தனது கிறிஸ்தவ நம்பிக்கையை கை விட சொல்லி  சித்திரவதைக்கு உள்ளானார். ஆனால் அவர் சித்திரவதைகளை எதிர்கொண்டாலும், தனது கிறிஸ்துவ நம்பிக்கையை கைவிடவில்லை. அதைத் தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் ஆரல்வாய்மொழியில் வீரமரணம் அடைந்தார். புனித தேவசகாயம் பிள்ளை டிசம்பர் 2, 2012 அன்று திருத்தந்தை XVI பெனடிக்ட் அவர்களால் புனிதர் பட்டம் பெற்றார், பின்னர் ஜூன் 22, 2014 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டார். புனித தேவசகாயம் பிள்ளை அவரது தைரியம், மத சகிப்புத்தன்மை மற்றும் அவரது கிறிஸ்துவிற்காக அவர் செய்த உயிர் தியாகம்  ஆகியவற்றிற்காக இன்றும், என்றும்  நினைவு கூறப்படுவார்.

புனித தேவசகாயத்திடம் மன்றாட்டு

புனித தேவசகாயத்திடம் மன்றாட்டு யேசு கிறிஸ்துவை அதிகமாக அறிந்து, அவரது அன்பை உணர்ந்து, அவரது பாடுகளுக்கு வேதனைப்பட்டு, மறை சாட்சியாக மரித்த புனித தேவசகாயமே, உமது மன உறுதியையும், இறை நம்பிக்கையையும் கண்டு உம்மை போற்றுகிறோம். கிறிஸ்தவ விசுவாசத்தின் விளை நிலமே, இந்த உலகில் தங்கள் விசுவாசத்தின் பொருட்டு துன்பப் படும் மக்களுக்காக வேண்டுகிறோம். மேலும், கிறிஸ்துவை அறியாதவர்கள் அவரை அறிந்து கிறிஸ்தவ வாழ்வு வாழவும், , நாங்களும் உம்மைப் போன்று சாட்சிய வாழ்வு வாழ, தேவையான மானவலிமையையும், ஆழ்ந்த இறை பற்றினையும், இறைவன் எமக்கு தந்தருள நீர் பரிந்துரைக்க வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம். மிகவும் இரக்கமுள்ள மறைசாட்சியே நாங்கள் துன்பத்தினால் துவண்டு கவலையினால் கலங்கும் பொது, முட்டிடிச்சி பாறையில் தண்ணீர் பொங்க செய்தது போல் எங்கள் கவலைகளை போக்கி மகிழ்ச்சி பொங்க செய்தருளும்; உம் பரிவன்பினால் எங்களுக்காக தொடர்ந்து கடவுளை மன்றாடுவீராக.
ஆமென்.